#BREAKING : அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 வரை நீதிமன்ற காவல்... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் டெல்லி மாநில அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அமலாக்கத்துறையால் கைதான அரவிந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத்துறையால் கைதான அரவிந்த் கேஜ்ரிவால்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த போதும், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் முதலமைச்சர் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து, அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறையின் காவலை நீட்டிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

திகார் சிறை
திகார் சிறை

இதையடுத்து, வருகிற ஏப்ரல் 15ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கேஜ்ரிவால் அடைக்கப்பட உள்ளார். சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது சிறையில் இருந்தே பணிகளை தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in