கேஜ்ரிவால் கைதுக்கு காரணம் காங்கிரஸ்தான்... பினராயி விஜயன் பகீர் குற்றச்சாட்டு; அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி!

கோழிக்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்
கோழிக்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளதால் இந்தியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக நேற்று டெல்லியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள ஒரு கருத்து இப்போது பெரும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 'இந்தியா கூட்டணி' என்ற பெயரில் அணி திரண்டுள்ளன. இருப்பினும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகளாக எதிரெதிர் கட்சிகளாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

கோழிகோட்டில் இடது ஜனநாயக கூட்டணி சார்பில் வாக்கு சேகரித்த முதல்வர் பினராயி விஜயன்
கோழிகோட்டில் இடது ஜனநாயக கூட்டணி சார்பில் வாக்கு சேகரித்த முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான அணியும் எதிரெதிர் துருவங்களாக போட்டியிடுகின்றன. இந்நிலையில் கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டுப் பேரணி பாஜகவுக்கு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்திலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை தாக்கும்போது பழமையான காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி
டெல்லியில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி

ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த நடவடிக்கைகள்தான் டெல்லி மதுபான கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு வழி வகுத்தன. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கூச்சலிட்டது. மேலும், டெல்லி மதுபான கொள்கை வழக்கு குறித்து விசாரணை கோரி காங்கிரஸ் புகார் அளித்தது. இருப்பினும், இப்போது நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு குறிவைப்பதை கண்டித்து நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை வரவேற்கிறேன்.” இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், கேஜ்ரிவால் கைதுக்கு காங்கிரஸ்தான் காரணம் என பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளது இந்தியா கூட்டணி கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in