இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முயலும் காங்கிரஸ்... மோடியின் அடுத்த தாக்குதல்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

‘இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி, இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறது’ என்று தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ள நாராயண்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, வழக்கம்போல காங்கிரஸ் கட்சியை சரமாரியாக சாடினார். அப்போது அவர், ’காங்கிரஸ் இந்துக்களையும், இந்து பண்டிகைகளையும் வெறுக்கிறது’ என்று குற்றம்சாட்டினார்.

பாஜக - காங்கிரஸ் அரசியல் மோதல்
பாஜக - காங்கிரஸ் அரசியல் மோதல்

"காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. காங்கிரஸின் இளவரசருக்கு டியூஷன் கொடுத்த தலைவரும்(சாம் பிட்ரோடா), அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கூடாது என்று கூறியுள்ளார். ராமர் கோயில் கட்டுவதும், ராம நவமியைக் கொண்டாடுவதும் இந்தியாவுக்கு எதிரானது என்றும், இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்” என மோடி சாடினார்.

’ராமர் கோயிலுக்கு சென்றபோது தன்னை தேசவிரோதி என்று காங்கிரஸ் கூறியதாகவும், இந்துக்களை சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். “இந்தியாவில் ஔரங்கசீப்பின் ஆட்சியை நிறுவ இவர்கள் விரும்புகிறார்களா? இதற்காகவா ஓட்டு ஜிஹாத் பற்றி பேசுகிறார்கள்?” என்று மோடி சீறினார்.

மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதாகவும் காங்கிரஸ் மீது மோடி தொடர்ந்து குற்றம் சாட்டினார். தேசத்தின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், அரசியல் ஆதாயங்களுக்காக சில சமூகங்களை திருப்திப்படுத்துவதே காங்கிரஸின் உண்மையான செயல்திட்டம் என்றும் அவர் பழித்தார்.

தென்னிந்திய பிரச்சார களத்தில் மோடி
தென்னிந்திய பிரச்சார களத்தில் மோடி

“எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகியோருக்கு பதிலாக முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது காங்கிரசுக்கு தெரியும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அதை எதிர்த்தார் என்பதும் அதற்குத் தெரியும். ஆனபோதும் தங்கள் முயற்சியை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்” என்று மோடி கூறினார்.

தென்னிந்திய மக்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் அப்போதைய அயலகத் தலைவரான சாம் பிட்ரோடாவின் பேட்டியை நினைவு கூர்ந்த மோடி, காங்கிரஸின் இனவெறிக் கருத்துகளை கடுமையாக சாடினார். ”தெலங்கானா மக்களை ஆப்பிரிக்கர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனென்று உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் உங்கள் தோலின் நிறம் அவர்களுக்குப் பிடிக்காது. யார் ஆப்பிரிக்கர், யார் இந்தியர்? ” என்றும் பிரதமர் மோடி கொந்தளித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in