கடப்பாவில் களமிறங்கும் ஒய்.எஸ்.ஷர்மிளா... 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா
ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 17 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பாவில் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் மேலும் 17 வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

அதன்படி, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா ஆந்திராவின் கடப்பா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கர்னூலில் பி.ஜி.ராம்புல்லய்யா யாதவ், பாபட்லாவில் ஜே.டி.சீலம், ராஜமுந்திரியில் கிடுகு ருத்ரராஜு, காக்கிநாடாவில் பள்ளம்ராஜு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

ஆந்திர மாநிலம் தவிர, ஒடிசா மாநிலத்தில் 8 வேட்பாளர்கள், பீகார் மாநிலத்தில் 3 வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் ஒரு வேட்பாளரும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநிலத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது கிஷன்கஞ்ச், கதிஹார் மற்றும் பாகல்பூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு வேட்பாளரான டாக்டர் முனீஷ் தமாங் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் அறிவித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 228 ஆக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in