காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

எங்கள் தேர்தல் அறிக்கையை திரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது பாஜக... தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் பாஜக தொடர்ந்து பரப்பி வருவதாக, தேர்தல் ஆணையத்திடன் காங்கிரஸ் கட்சி இன்று புகார் அளித்துள்ளது.

”தேர்தல் அறிக்கை மட்டுன்றி சமூகத்தின் சமமான வளர்ச்சி குறித்த ராகுல் காந்தியின் பேச்சை திரித்தும் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பாஜக பரப்புகிறது. இந்த பொய்யான கருத்துக்களால் ஊதியம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினரிடையே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குழப்பத்தையும், கோபத்தையும் பாஜக திட்டமிட்டு பரப்புகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பணியாளர்கள் அமைப்பின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி குற்றம்சாட்டி உள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி

“காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உங்கள் வருமானம் மற்றும் சொத்துக்களில் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் அமைந்தால், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதை ஆராய்வார்கள். அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அந்த சொத்துக்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். பின்னர் பகிர்ந்தளிக்கப்படும்" என்று நேற்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இதனை சுட்டிக்காட்டிய பிரவீன் சக்ரவர்த்தி, இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பாஜக தலைவர்கள், மக்களின் 'சொத்துக்களை பறித்து' மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் சதி செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ”நமது சமூகத்தின் மிகவும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு' குறித்து மட்டுமே ராகுல் காந்தி பேசினார். இதனையும் பாஜகவினர் திரித்துப் பரப்பி வருகின்றனர்” என்றும் பிரவீன் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

அரசியல் வதந்திகளுக்கு வசதியான வாட்ஸ் ஆப் மூலமாகவும் இந்த காங்கிரஸ் எதிர்ப்பு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு பெயரிலான ’ஏழைகளுக்கு மறுபங்கீடு’ திட்டத்தின் கீழ், மக்கள் சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கை காங்கிரஸ் பறிமுதல் செய்யப்போவதாகவும், அந்த வாட்ஸ் அப் தகவல் பீதி கிளப்பி வருகிறது. இந்த சமூக ஊடக டிரெண்டிங் வதந்தி குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று முறையிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in