கை கொடுத்த 4:3 ஃபார்முலா... காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி!

இறுதியானது இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியின் தொகுதி பங்கீடு
இறுதியானது இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியின் தொகுதி பங்கீடு

டெல்லியில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்குத் தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா கூட்டணி உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி இறுதியாகியுள்ள நிலையில், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியை நேற்று இறுதி செய்தது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இதைத் தொடர்ந்து டெல்லி, ஹரியாணா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லி மாநிலத்தில் மொத்தம் உள்ள 7 இடங்களில், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. காங்கிரஸ் கட்சி சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி
அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி

இதேபோல் குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரூச் மற்றும் பவ்நகர் தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவை பொருத்தவரை மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சி குருக்‌ஷேத்ரா தொகுதியிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சந்தீப் பதக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை இறுதி செய்யும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்கள்... ஒரே நாளில் நவக்கிரக சுற்றுலாவுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம்!

அண்ணன் பேச்சை அண்ணனே கேட்கமாட்டாரு... சீமானை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கூகுள் பே சேவை ஜூன் 4 முதல் நிறுத்தம்...பயனாளர்கள் அதிர்ச்சி!

ராணிப்பேட்டையில் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு... அதிர்ச்சியில் மக்கள்!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் லோட்டஸ்... கே.பி.ராமலிங்கம் சொல்லும் கணக்கு நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in