மணிசங்கர் அய்யரின் பேச்சில் உடன்பாடு இல்லை; மறுப்பு தெரிவித்தது காங்கிரஸ்!

மணிசங்கர் அய்யர்
மணிசங்கர் அய்யர்

பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பவன் கேரா
பவன் கேரா

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், பாகிஸ்தான் குறித்து பேசிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவரின்  அந்த  பேட்டியில், "பாகிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அவர்களிடம் அணுகுண்டு இருக்கிறது. அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அங்கு ஒரு மோசமான மனிதர் அதிகாரத்திற்கு வந்து அணுகுண்டை பயன்படுத்திவிட்டால், அதன் பாதிப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது மோடியின் இந்தியா என்று பாஜகவினர் மணிசங்கர் அய்யருக்கு பதிலளித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து  வருகிறார்கள்.  இந்நிலையில் மணிசங்கர் பேசியது அவரது சொந்த கருத்து என்றும், அவரது கருத்தில் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

மணிசங்கர் அய்யர்
மணிசங்கர் அய்யர்

இது குறித்து காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடியின் அர்த்தமற்ற பேச்சுக்களில் இருந்து மக்களை திசைதிருப்ப மணிசங்கர் அய்யரின் பழைய காணொலியை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. அவரது கருத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. அவர் கட்சிக்காக பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தீர்க்கமான மற்றும் உறுதியான தலைமையில், நமது ஆயுதப் படைகளின் வீரத்தால் கடந்த 1971 டிசம்பர் மாதம் பாகிஸ்தான் உடைந்து சுதந்திர வங்கதேசம் உதயமானது என்பதை காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசமும் பெருமையுடன் நினைவு கூர்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1974-ம் ஆண்டு மே 18-தேதி இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியாவின் அணுசக்தித் திறன் உலகிற்கு அறிவிக்கப்பட்டது.  நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தேசநலன் சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது' என்று பவன் கேரா தெரிவித்துள்ளார். 

அத்துடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள பவன் கேரா, "பழைய வீடியோக்களை பயன்படுத்தலாம் என்றால், இதோ, சமீபத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அளித்த பேட்டியில்,  சீனாவைக் கண்டு இந்தியா அஞ்ச வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதற்கு பாஜகவினர் என்ன சொல்லப் போகிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in