‘வங்கியிலிருந்து எங்கள் பணத்தை பாஜக திருடுகிறது; நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இப்படியா செய்தோம்?’ காங்கிரஸ் குமுறல்

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

‘வங்கிக் கணக்குகளில் இருந்து எங்கள் பணத்தை பாஜக திருடுகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இப்படி ஏதேனும் செய்தோம் என பாஜகவால் குற்றம்சாட்ட முடியுமா?’ என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் சாடியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து, ரூ.65.89 கோடி தொகையை வருமான வரித்துறை பிடித்தம் செய்திருப்பதாக காங்கிரஸ் முன்வைக்கும் புகாரின் அடிப்படையில் வேணுகோபால் இவ்வாறு சாடி உள்ளார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜகவை ஒருபோதும் இவ்வாறு நடத்தவில்லை என்றும் அவர் வருத்தம் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்

"வங்கிகளின் சமீபத்திய தகவலின்படி, பாஜக அரசு எங்கள் கட்சியின் வங்கி வைப்புத்தொகையிலிருந்து ரூ.65.89 கோடியை அரசுக்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தியது. பாஜக சேகரித்த கட்சி நிதி போலன்றி இந்தத் தொகை கட்சியின் சாமானிய தொண்டர்கள் வசமிருந்து நிதியாக சேகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் கணக்கு இவ்வாறாக பாஜக அரசால் அபகரிக்கப்பட்டுவிட்டது" என்று வேணுகோபால் விளக்கி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கூடவே அரசியல் ரீதியாகவும் காங்கிரஸ் கட்சி பாஜக மீது கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. “இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான குரலை முடக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. சர்வாதிகாரத்திற்கு இதுவே எடுத்துக்காட்டு. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னதாக குற்றம்சாட்டினார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இவற்றுக்கு பதிலளித்த பாஜக, ‘இது வருமான வரித்துறையின் வழக்கமான நடவடிக்கையாகும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்ப்பதற்காக, பொதுத்தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி குறிவைக்கப்படுவதாக ஒரு தவறான சித்தரிப்பை காங்கிரஸ் கட்சி உருவாக்க முற்படுகிறது’ என பதிலுக்கு காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!

விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி சுருட்டல்!

கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!

ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

சூப்பர் ஸ்பீடு விஜய்... இன்னும் 10 நாளில் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்!

ReplyReply allForwardAttendee panel closed

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in