அண்ணனின் சீர் எனக் கொண்டாடும் பெண்கள்... தருமபுரியில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Updated on
2 min read

கலைஞர் உரிமைத் தொகையை பெற்ற பெண்கள். ’இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்’ என கூறுவதாக தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை துவக்கி வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரிக்கு வருகை தந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 993 முடிவடைந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்ததோடு, 75 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பின்னர் மேடையில் பேசிய அவர், ”தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான முத்தான விழா இது. தமிழ்நாடு மகளிர் முன்னேற்றத்தில் தருமபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. மகளிர் சுய உதவிக் குழு என்ற அமைப்பை தருமபுரியில் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். மகளிருக்கு உரிமை தொகை வழங்குவோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்” என்றார்.

தருமபுரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒரு பகுதியினர்
தருமபுரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களில் ஒரு பகுதியினர்

மேலும், ”மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்கள், ’இது ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர்’ என்று கூறுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன் பெறுகின்றனர். திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். இரண்டு ஆண்டுகளில் ’நான் முதல்வன் திட்டம்’ மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

’மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயன்படுகின்றனர். ’விடியல் பயண்ம்’ திட்டத்தின் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கின்றனர். 24.86 லட்சம் மாணவர்கள் ’இல்லம் தேடி கல்வி’ திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர். ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட முடியுமா? ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை பட்டியலிட முடியுமா? அதிமுக ஆட்சியில் மக்கள் வேதனை தான் பட்டனர்.

சென்னைப் புயல் பாதிப்பு, தென் தமிழக மாவட்டங்களில் அதி கனமழை பாதிப்பு போன்றவற்றின் போது பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் இப்போது வருகிறார் என்றால் எதற்காக? மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது அதனால். தேர்தல் நேரத்தில் தான் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமருக்கு பாசம் பொங்கும்.

ஜிஎஸ்டி வரி இழப்பை நிறுத்தியதால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் வரவில்லை. வெள்ள நிவாரண நிதியாக நாம் கேட்ட 37,000 கோடி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கவில்லை. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு முக்கால் பங்கு மாநில அரசுதான் நிதி உதவி செய்கிறது. ஜல்ஜீவன் திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பு 50 விழுக்காடு. மாநில அரசின் நிதியில் திட்டங்களை செயல்படுத்திவிட்டு, அதற்கு பிரதமர் மோடி தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டிருக்கிறார். வெறும் கையால் தமிழ்நாட்டிற்கு வந்து முழம் போட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!

#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!

டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!

'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!

திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in