மக்களவைத் தேர்தல் பணி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மக்களவைத் தேர்தல் பணி... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மக்களவைத் தேர்தலை ஒட்டி, வழிகாட்டு நெறிமுறை விவரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், மக்களவை தேர்தலை ஒட்டி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணியை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு
தபால் வாக்கு

தபால் வாக்கு சீட்டு அச்சடிக்கும் பணி விவரங்களை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம்.ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும். தபால் வாக்கு சீட்டுகளில் வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவை சரியாக அச்சடிக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அச்சடிக்கப்பட்ட தபால் வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். வாக்கு சீட்டுகள் அனைத்தும் ஒரு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டு, தனி அறையில் பாதுகாக்கப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!

குட் நியூஸ்... 60 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!

மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!

நடிகர் மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்... இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in