ஆளுநரின் செயல்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது - கடுமையாக விமர்சித்த பி.சி ஸ்ரீராம்!

பி.சி ஸ்ரீராம்
பி.சி ஸ்ரீராம்

ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல், பல்வேறு காரணங்களை கூறி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கண்டித்துள்ளார்.

சட்டமன்றத் கூட்டத்தொடர்
சட்டமன்றத் கூட்டத்தொடர்

2024ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத் தொடர் தொடங்கியது. பின்னர் அரசு தயாரித்து வழங்கிய உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார். அப்போது, இந்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும், தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளது என்றும், கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனும் எனது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறி, தனது உரையை முழுதாக வாசிக்காமல் 4 நிமிடங்களில் முடித்து கொண்டு, தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்
சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்

பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது, மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரணமாக ரூ.50 கோடியை ஆளுநர் பெற்றுத் தர வேண்டும் என்றும், சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் என்றும் குறைந்தவர்கள் அல்ல என்றும் அப்பாவு பதிலடி கொடுத்தார். இதையடுத்து சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில், தமிழக ஆளுநரை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார். உங்களது செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இதுபோன்று ஆளுநரின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in