தமிழ்நாடு மீனவர்கள் மீது பிரதமர் மோடிக்கு திடீர் பாசம் ஏன்?... முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பத்தாண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து விட்டு தேர்தலுக்காக திடீரென மீனவர்கள் மீது பாச நாடகத்தை அரங்கேற்றுவது  ஏன் என பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் காங்கிரசும், திமுகவும் செய்த துரோகத்தால் தான் கச்சத்தீவு இலங்கைக்கு  தாரைவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதே விஷயத்தை மீண்டும் விளக்கமாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கச்சத்தீவு விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ” பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென மீனவர்கள் மீது பாசம் வந்தது ஏன்? 10 ஆண்டுகளாள கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுவது ஏன்?   

அடுத்தடுத்து இரண்டு இயற்கை பேரிடர்களைக் கண்ட தமிழ்நாட்டுக்கு  ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கூட வெள்ள நிவாரணமாக  தராதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், ”10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு திட்டமாக கொண்டுவரப்பட்டதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் வெறும் 29 காசுகள் மட்டுமே திருப்பித் தருகிறீர்கள். திசை திருப்பல்களில் ஈடுபடாமல் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in