சென்னையில் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்... மீண்டும் செக் வைத்த காவல் துறை!

அண்ணாமலை, ஜே.பி.நட்டா
அண்ணாமலை, ஜே.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க இருந்த கூட்டத்திற்கு போலீஸார் மீண்டும் அனுமதி மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யாத்திரையில் அண்ணாமலை
யாத்திரையில் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் பலத்தை நிரூபிக்க இந்த பயணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து முக்கிய தொகுதிகளையும் முடித்துக்கொண்டு வடமாவட்டங்களில் தற்போது தனது யாத்திரையை அவர் மேற்கொண்டு வருகிறார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்களை நேற்று சந்தித்து உரையாற்றினார். இந்நிலையில், அண்ணாமலையின் யாத்திரை வரும் 11-ம் தேதி சென்னை வந்தடைய உள்ளது. இதனை முன்னிட்டு, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

அண்ணாமலை, ஜே.பி.நட்டா
அண்ணாமலை, ஜே.பி.நட்டா

முதலில் இந்த பொதுக்கூட்டம் சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் திடலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து காரணங்களைச் சுட்டிக் காட்டி போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, சென்னை நந்தனம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறையினர் இந்த பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தனர்.

இதனால் ஷெனாய் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு பாஜக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதில், பள்ளி வளாகத்திற்குச் செல்லும் முன் ஜே.பி.நட்டா அண்ணாமலையுடன் சிறிது தூரம் நடந்து செல்வார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஷெனாய் நகரில் உள்ள பள்ளியில் பாஜக நிகழ்ச்சியை நடத்தவும், சென்னை காவல் துறை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. இது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in