கைபிடிச்சுக் கூட்டிவரும் அப்பா இல்லாத முதல் தேர்தல்... கண் கலங்கிய விஜய பிரபாகரன்!

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

நான் வேட்பாளராக களமிறங்கி இருக்கும் முதல் தேர்தலில் கைப்பிடித்து அழைத்து வந்து வாக்களிக்கச் சொல்லிக் கொடுக்கும் அப்பா இல்லாதது மிகுந்த வருத்தளிக்கிறது” என மறைந்த விஜயகாந்தின் மகனும் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளருமான விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சாலிகிராமம் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மூவரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

பிரேமலதாவுடன் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன்
பிரேமலதாவுடன் விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ”ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு அப்பா எனது கையைப் பிடித்து அழைத்து வந்து வாக்களிக்க சொல்லிக் கொடுப்பார். முதல் முறையாக அப்பா இல்லாமல் வாக்களிக்க வந்துள்ளேன். நான் வேட்பாளராக களமிறங்கி உள்ள தேர்தலில் அப்பா இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விருதுநகரில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ”என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ”சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் வருகிறது. அந்த இடங்களில் வாக்களிக்க கூடுதல் நேரத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in