அண்ணாமலை லேகியம் விற்பவர் தான்.... ஆர்.பி.உதயகுமாருக்கு பதிலடி கொடுத்த பாஜக!

அண்ணாமலை
அண்ணாமலை

அண்ணாமலை லேகியம் விற்பவர் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று ஆவேசப்பட்டு பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, “ஆமாம், அண்ணாமலை ஊழலை ஒழிக்கும் லேகியம் விற்கிறவர் தான்” என்று சொல்லி இருக்கிறது. 

செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார்

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கருத்துக்களை எடுத்து வைத்தார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும் அவர் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"பேரறிஞர் அண்ணாவை, அம்மாவை, அதிமுகவைப் பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும், தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அதிமுக என்ற இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. நான் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக ஆகியுள்ளேன். ஆனால் அண்ணாமலை கவுன்சிலராகக்கூட ஜெயிக்காதவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை.

கே பி ராமலிங்கம்
கே பி ராமலிங்கம்

தேர்தலில் நின்று வென்றால்தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை அல்ல... அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்கமுடியாது. பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சி வந்தாலும் தாய் உள்ளதோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்" என அண்ணாமலையை கடுமையாக தாக்கினார் உதயகுமார். 

உதயகுமாரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இதற்கு காட்டமாக பதில் அளித்துள்ளார். "அண்ணாமலை லேகியம் விற்பவர் தான்,  ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை அவர் விற்கிறார். ஊழல் நோயையும் ஊழல்வாதிகளையும் அவர் ஒழிப்பார்" என்று உதயகுமாருக்கு ராமலிங்கம் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே அனைத்து இடங்களையும் பிடிக்கும், அதிமுக, பாஜக அணிகள் ஓர் இடத்திலும் வெல்ல வாய்ப்பில்லை என்று வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்பு குறித்தி கேட்டதற்கு, "ராமரைப்போல கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் பிரதமர் மோடி. இவரைப் போன்றவர்களை இளைய தலைமுறை பார்த்ததில்லை. கருத்துக் கணிப்புகளை விட மக்கள் மனநிலையே தேர்தல் வெற்றிக்கு முக்கியம்" என்று கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in