சர்ச்சை வீடியோ... அகிலேஷ் யாதவ் வழிபட்ட கோயிலை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர்!

அகிலேஷ் யாதவ் வழிபட்ட பிறகு கோயிலை சுத்தப்படுத்தும் பாஜகவினர்
அகிலேஷ் யாதவ் வழிபட்ட பிறகு கோயிலை சுத்தப்படுத்தும் பாஜகவினர்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வழிபட்ட பிறகு, பாஜகவினர் கோயிலை, கங்கை நீரை கொண்டு சுத்தப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், கனௌஜ் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் நேற்று கனெளஜ், சித்தாபீத் பாபா கௌரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று வழிபட்டு, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்நிலையில் அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டு விட்டு சென்ற பிறகு, பாஜகவினர் கோயில் வளாகத்தை கங்கை நீரை கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த சர்ச்சை குறித்து பாஜகவினர் கூறுகையில், ‘அகிலேஷுடன் பல முஸ்லிம் தலைவர்களும் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் தங்கள் கால்களில் ஷூ அணிந்து கோயில் வளாகத்துக்குள் நுழைந்தனர். இதனால் கோயிலை கங்கை நீரால் சுத்தம் செய்து சடங்குகளைச் செய்தோம்' என்றனர்.

இதேபோல் பாஜக நகரத் தலைவர் ஷிவேந்திர குமார் குவால் கூறுகையில், 'சில முஸ்லிம் தனி நபர்களும், அவர்களுடன் வந்த மற்றவர்களும் கோயிலுக்குள் காலணி அணிந்து நுழைந்தது மட்டுமின்றி, கோயில் வளாகத்துக்குள் துப்பினர்' என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி தலைவர் ஐ.பி. சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

எனவே பாஜக கோயில் வளாகத்தை கங்கை நீரில் கழுவியுள்ளது. முன்பு லக்னோவில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தையும் பாஜகவினர் கங்கை நீரில் கழுவினர். பிற்படுத்தப்பட்ட, தலித், எளிய மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு இந்து கோயில்களில் வழிபட உரிமை இல்லை என பாஜக நம்புகிறது. எனவே இந்த முறை பிடிஏ, பிற்படுத்தப்பட்ட, தலித், பின்தங்கிய மற்றும் சுரண்டப்பட்ட மக்கள் இணைந்து, அதிகாரத்திலிருந்து வெளியேறும் வழியை பாஜகவுக்கு காண்பிப்பர்' என குறிப்பிட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவ், வழிபட்டுவிட்டு சென்ற பிறகு பாஜகவினர் கோயில் வளாகத்தை கழுவிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in