மேட்ச் பிக்ஸிங் விவகாரம்... ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (நடுவில்) உள்ளிட்ட பாஜகவினர்
ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (நடுவில்) உள்ளிட்ட பாஜகவினர்

தேர்தலில் பிரதமர் மோடி 'மேட்ச் பிக்ஸிங்' செய்கிறார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறிய கருத்தை குறிப்பிட்டு அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக இன்று புகார் அளித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி தலைவர்கள்
டெல்லியில் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி தலைவர்கள்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லியில் நேற்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, “கிரிக்கெட் போட்டியில் பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்' என்கின்றனர். இப்போது மக்களவைத் தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்'கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இந்தியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி
பிரதமர் மோடி, ராகுல் காந்தி

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறி வைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்'தான்.” என பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் என ராகுல் காந்தி கூறிய கருத்தால் பாஜக அதிருப்தி அடைந்தது. இதையடுத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் குமார் ஆகியோர் அடங்கிய அக்கட்சியினர், ராகுல் காந்தி மீது இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “நேற்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை மேட்ச் பிக்ஸிங் என கூறினார். மத்திய அரசு தனது ஆட்களை தேர்தல் ஆணையத்துக்குள் அனுப்பியுள்ளது என்றும் அவர் கூறினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, ராகுல் காந்தி மற்றும், இதர காங்கிரஸ் தலைவர்கள், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in