பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜகதான் தேர்ந்தெடுக்கிறது... பரபரப்பு கிளப்பும் டேனிஷ் அலி!

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜகதான் தேர்ந்தெடுக்கிறது... பரபரப்பு கிளப்பும் டேனிஷ் அலி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கொள்கையில் இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது என்று அம்ரோஹா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டேனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ஆளும் கட்சியான பாஜக, ஆர்எல்டி, அப்னா தள் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்து போட்டியிடுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி

இந்நிலையில் மாயாவதியின் அரசியல் குறித்து பேசியுள்ள அக்கட்சியின் முன்னாள் எம்.பியும், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளருமான டேனிஷ் அலி, ”இந்தத் தேர்தலில் என்னையும், இந்தியா கூட்டணியையும் வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் ஒன்றாக கைகோத்துள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கொள்கையில் இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி எந்த அடிப்படை நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாஜக தலைவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றப்போவதாக கூறி வருகின்றனர். ஆறு முறை எம்.பியாக இருந்த ஆனந்த்குமார் ஹெக்டேவே இதை கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணியில் இணையாது விலகியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது. இதன்மூலம், பாஜகவின் பி-டீமாக பகுஜன் சமாஜ் செயல்படுவது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது.

டேனிஷ் அலி
டேனிஷ் அலி

எனவே, ஆபத்தை உணர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியினரும், பட்டியலின அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், அது நாட்டுக்கு மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்

டேனிஷ் அலி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்ரோஹா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின்போது மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. அப்போது, டேனிஷ் அலிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்த விவகாரம் பெரிதான நிலையில் திடீர் திருப்பமாக டேனிஷ் அலி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது பகுஜன் சமாஜ் கட்சி. இதைத் தொடர்ந்து டேனிஷ் அலி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் இப்போது காங்கிரஸ் சார்பில் அம்ரோஹா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in