நவ்நீத் ராணா
நவ்நீத் ராணா

'காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாகிஸ்தானுக்கு செல்லும்' - சர்ச்சை கிளப்பிய பாஜக எம்பி- நவ்நீத் ராணா மீது வழக்குப்பதிவு!

காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது நேரடியாக பாகிஸ்தானுக்கு செல்லும் என பாஜக எம்பி- நவ்நீத் ராணா பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தெலங்கானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை நவ்நீத் ராணா, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் பாஜகவில் இணைந்தார். இந்த முறை நவ்நீத் ராணா, அமராவதி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார். அத்தொகுதியில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நவ்நீத் ராணா, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, ஹைதராபாத் தொகுதியில் பாஜக வேபாளர் மாதவி லதாவுக்கு ஆதரவாக நவ்நீத் ராணா சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இத்தொகுதியில் மாதவி லதாவை எதிர்த்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நவ்நீத் ராணா பேசுகையில், அசாதுதீன் ஒவைசியின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி கடந்த 2013ல் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய சர்ச்சை கருத்தை நினைவு கூர்ந்து பேசினார்.

அப்போது, அக்பருதீன் ஒவைசி, இங்குள்ள போலீஸார் 15 நிமிடங்கள் மட்டும் அகற்றுங்கள். நாட்டில் இந்து - முஸ்லீம் விகிதத்தை சமப்படுத்துகிறோம் என கூறியிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையானது.

அக்பருதீன் ஒவைசி, அசாதுதீன் ஒவைசி
அக்பருதீன் ஒவைசி, அசாதுதீன் ஒவைசி

இந்நிலையில் இதனை சமீபத்திய பிரச்சாரத்தில் நினைவு கூர்ந்த நவ்நீத் ராணா அவர்களுக்கு 15 நிமிடங்கள் தேவைப்படும். எங்களுக்கு வெறும் 15 வினாடிகளே போதும் என பதிலடி கொடுத்து பேசியிருந்தார்.

நவ்நீத் ராணாவின் இந்த பேச்சு அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சை முடிவதற்குள்ளாக ராணா மற்றொரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஷாத்நகரில் பிரச்சாரம் செய்த போது நவ்நீத் ராணா பேசுகையில், 'காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டாம். நீங்கள் (மக்கள்) காங்கிரஸுக்கு வாக்களித்தால் அந்த வாக்கு நேரடியாக பாகிஸ்தானுக்குச் செல்லும்' என பேசினார்.

நவ்நீத் ராணா
நவ்நீத் ராணா

தற்போது இதுவும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில் நவ்நீத் ராணாவின் இந்த பேச்சு குறித்து தேர்தல் பறக்கும்படைக்கு புகார் சென்றது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது நவ்நீத் ராணா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in