வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்கும் ராகுல் காந்தி... தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

பிரதமர் மோடி - ராகுல் காந்தி
பிரதமர் மோடி - ராகுல் காந்தி

நாட்டில் வடக்கு தெற்கு பிரிவினையை மக்கள் மத்தியில் ராகுல் காந்தி உருவாக்க முனைவதாக குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக இன்று புகார் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தனது ராஜஸ்தான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வலையில் பேசியதாக, அவருக்கு எதிராக புகார் அளிக்கப்போவதை காங்கிரஸ் அறிவித்த வேகத்தில், பாஜகவும் ராகுல் காந்திக்கு எதிராக கிளம்பியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு ஆகியவற்றை பிரதமர் மோடி பேசியது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியிருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மொழி மற்றும் வடக்கு - தெற்கு பிரிவினைகளின் பெயரால், குடிமக்களை சண்டையிட சதி செய்வதாக, ராகுல் காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளது. இதனை பாஜக தலைவர்களில் ஒருவரான தருண் சுக் உறுதி செய்துள்ளார். மோடிக்கு எதிராக காங்கிரஸ் கிளம்பியதை அடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக கிளம்பி உள்ளது.

"அவரது உரைகளில், வடக்கு மற்றும் தெற்கு இடையே சண்டையிட அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். நாடு முன்னேறி வருகிறது; ஆனால் ராகுல் காந்தி நாட்டைத் துண்டு துண்டாகப் பிரிப்பது பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்” என்று தருண் சுக் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல் காந்தி

கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, ​பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது இந்த சர்ச்சைக்கு வித்திட்டது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் புகழ் பெற்ற ’வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பதையே, பாஜகவுக்கு எதிராக பலவகையாக ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், வடக்கே பாஜகவுக்கு தென்படும் ஆதரவு, தெற்கே துவண்டுள்ளது. இதனை முன்வைத்தும், தென்னிந்தியா பாஜகவை முற்றிலுமாக நிராகரிப்பதாக ராகுல் காந்தி அக்கட்சியை சீண்டி வந்தார்.

இவை தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து வந்த பாஜக, இன்று பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் முறையிடப்போவதாக அறிவித்ததும், உடனடியாக களத்தில் இறங்கி ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in