மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிதான்; பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கூட பெறாது... கேஜ்ரிவால் கணிப்பு!

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 230 தொகுதிகளை கூட பெறாது என்றும், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் கேஜ்ரிவால் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடந்த 20 மணி நேரத்தில், நான் தேர்தல் நிபுணர்கள் மற்றும் மக்களுடன் பேசினேன். இதன் மூலம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டேன்.

ஜூன் 4க்குப் பிறகு என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்காது. ஹரியாணா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் என அனைத்து மாநிலங்களிலும் அவர்களுக்கு (பாஜக) இடங்கள் குறைந்து வருகின்றன.

என்டிஏ கூட்டணிக்கு 220 லிருந்து 230 இடங்கள் வரைதான் கிடைக்கும் என ஊகிக்கப்படுகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது.

என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி
என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி

75 ஆண்டுகளில் இந்த (ஆம் ஆத்மி கட்சி) அளவுக்கு வேறு எந்தக் கட்சியும் துன்புறுத்தப்படவில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் கூறுகிறார் ஆனால் திருடர்கள் அனைவரும் அவரது கட்சியில் உள்ளனர்.” இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in