‘‘இந்தியா கூட்டணி’யில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமீனில் வெளியே இருப்பவர்கள்’ -ஊழல் புகார்களில் பாஜக பதிலடி

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

‘இந்தியா கூட்டணியின் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமீனில் வெளியே இருப்பவர்கள்’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சாடியுள்ளார்.

பாஜக - காங்கிரஸ் இடையிலான ஊழல் குற்றச்சாட்டுகள் பரஸ்பரம் பற்றிக்கொண்டு வெடித்து வருகின்றன. 2014 வரை பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பெருக்கெடுத்திருந்த ஊழல்களால் கசந்திருந்த மக்கள், ஊழல் எதிர்ப்பு முழக்கத்துடன் வந்த பாஜகவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர். ஆனால் அடுத்த பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் அதே போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக மீது காங்கிரஸ் சுமத்தும்படி காட்சிகள் மாறிப் போயுள்ளன.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சியின் பழைய ஊழல்கள், பாஜகவின் புதிய ஊழல்கள் என இரு தேசிய கட்சிகளும், தற்போது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. நடப்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களங்களில் இந்த ஊழல் புகார்களே முதலிடம் பிடித்துள்ளன. இவற்றில் இன்றைய தினம் தேர்தல் பத்திரம் திட்டத்தை முன்வைத்து, ’பேபிஎம்’(PayPM) என்ற முழக்கத்தை காங்கிரஸ் முன்னெடுத்தது. அதற்கு பதிலடியாக காங்கிரஸ் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி கட்சியினர் மீதும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்குதல் தொடுத்துள்ளார்.

மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள பியூஷ் கோயல், ’இந்தியா கூட்டணி’ ஊழலில் மூழ்கிவிட்டதாகவும், கூட்டணியின் அங்கத்தினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் எனவும் கிண்டல் செய்துள்ளார்.

“நாட்டைப் பிளவுபடுத்துவோம், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவோம் என ஆரம்பித்த எதிர்க்கட்சிகள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளன. நாட்டின் எதிர்காலம் எப்படி முன்னேற்றப் பாதையில் அமையும் என்று பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் பலவீனமடைந்து உள்ளன. சட்டத்தின் பிடி மிகவும் வலுவாக உள்ளது. யார் தவறு செய்தாலும் பிடிபடுவார்கள். அவர்கள் ஊழல் செய்யும் போது இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் அவர்கள் சட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்” என்று பியூஷ் கோயல் சாடியுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக 5 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன, உத்தரப் பிரதேசத்திற்கு(80) அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளை கொண்டிருப்பதில் மகாராஷ்டிரா முக்கியத்தும் பெற்றுள்ளது.

தேசிய அளவிலான ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) ஆகியவை ’மகா விகாஸ் அகாடி’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையேயான சீட் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, சிவசேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in