பாஜக இப்போதெல்லாம் 400 இடங்களைப் பற்றி பேசுவதே இல்லை; ஏனென்றால்... கலாய்த்த பூபேஷ் பகேல்!

பூபேஷ் பகேல்
பூபேஷ் பகேல்

முதல் இரண்டு கட்ட தேர்தலுக்குப் பிறகு 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெறுவோம் என்று சொல்வதை பாஜக கைவிட்டுவிட்டதாக கூறிய சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், 3ம் கட்ட தேர்தலுக்குப் பின்னர் என்ன செய்வது என தெரியாமல் பாஜக உள்ளது என விமர்சித்துள்ளார்.

சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிம் பேசிய பூபேஷ் பகேல், "முதல் இரண்டு கட்ட தேர்தல்களுக்குப் பிறகு 400ஐத் தாண்டுவதை பாஜகவினர் மறந்துவிட்டார்கள். அதனால் அவர்கள் முஸ்லிம் லீக் மற்றும் தாலி மற்றும் கால்நடைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இப்போது அவர்களால் அதைப் பற்றியும் பேச முடியாது. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் இறுகிய மூலையில் அவர்கள் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் இரண்டு கட்டங்களில் இதுவரை 189 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

இதில் உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்கள், சத்தீஸ்கரில் 7 இடங்கள், மத்தியப் பிரதேசத்தில் 9 இடங்கள், அசாமில் 4 இடங்கள், பீகாரில் 5 இடங்கள், மகாராஷ்டிராவில் 11 இடங்கள், தாதர்-நகர் ஹவேலி மற்றும் கோவாவின் டாமன்-டியுவில் தலா ஒரு இடத்துக்கும், உத்தரபிரதேசத்தில் 2 இடங்களுக்கும், கர்நாடகாவில் 14 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 4 இடங்களுக்கும், குஜராத்தில் 25 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல்

உத்தரபிரதேசத்தின் இரண்டு விஐபி தொகுதிகளான அமேதி மற்றும் ரேபரேலியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பூபேஷ் பகேல், மே 9 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்துக்கு செல்லவுள்ளதாக கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in