வாக்குச் சாவடிக்குள் பணம் விநியோகம்: பூத் ஏஜெண்ட் மீது பாஜக வேட்பாளர் புகார்

வாக்குச் சாவடியில் திரிணமூல் பூத் ஏஜெண்டிடமிருந்து கைப்பற்றப்பட்ட சீட்டை காண்பிக்கும் பாஜக எம்பி- லாக்கெட் சாட்டர்ஜி
வாக்குச் சாவடியில் திரிணமூல் பூத் ஏஜெண்டிடமிருந்து கைப்பற்றப்பட்ட சீட்டை காண்பிக்கும் பாஜக எம்பி- லாக்கெட் சாட்டர்ஜி

மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி தொகுதியில் தனது போட்டி வேட்பாளரான ரச்சனா பானர்ஜிக்கு வாக்களிக்குமாறு பணம் விநியோகித்த திரிணமூல் பூத் ஏஜென்ட் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டதாக பாஜக எம்பி- லாக்கெட் சாட்டர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று 5வது கட்ட மக்களவைத் தேர்தலில் 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மக்களவைத் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ரச்னா பானர்ஜி போட்டியிடுகிறார்.

ரச்னா பானர்ஜி , லாக்கெட் சாட்டர்ஜி
ரச்னா பானர்ஜி , லாக்கெட் சாட்டர்ஜி

பாஜக சார்பில் தற்போதைய எம்பி- லாக்கெட் சாட்டர்ஜியும், காங்கரஸுடன் இணைந்த இந்தியா கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மனதீப் கோஷ் போட்டியிடுகிறார்.

இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஹூக்ளியின் தனியாகாலியில் உள்ள வாக்குச்சாவடி எண் 117ல் தேர்தல் விதிமீறல் நடந்ததாக பாஜக எம்பி- லாக்கெட் சாட்டர்ஜி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக எம்பி-லாக்கெட் சாட்டர்ஜி கூறும் போது, ”சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடியில் ஆஷா திட்ட பணியாளரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூத் ஏஜெண்ட், வாக்குச் சாவடியில் அமர வைக்கப்பட்டு, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து, திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்த பணியமர்த்தப்பட்டிருந்தார்.

அவரை அங்கு பணியமர்த்தியது யார் என்று கேட்டபோது, அவர் ஒரு அதிகாரியை கூறினார். ஆனால் அதுபோன்ற யாரும் அங்கு இல்லை.

லாக்கெட் சாட்டர்ஜி
லாக்கெட் சாட்டர்ஜி

இது குறித்து போலீஸாரிடம் தெரிவித்தபோது, வாக்குச்சாவடியில் வரிசையை ஒழுங்குபடுத்த அவர் அங்கு இருப்பதாக போலீஸார் கூறினார். ஆனால், அப்போது வாக்குச்சாவடியில் கூட்டம் எதுவும் இல்லை. தானியாகாலி, பலகாரில் 2, 3 வாக்குச்சாவடிகளில் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. ஆனால் அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

பெட்ரோல் பங்கில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து; வைரலாகும் வீடியோ!

ஈரான் அதிபர் விபத்தில் பலி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு... பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய மக்கள்!

3,000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்... 4வது நாளாக 20,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு!

குற்றால வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி. கொள்ளுப் பேரன்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in