பாஜக மாநில நிர்வாகிகளை வளைக்கும் அதிமுக: அதிர்ச்சியில் அண்ணாமலை!

இபிஎஸ் - தங்கராஜ்
இபிஎஸ் - தங்கராஜ்

தமிழக பாஜகவின் ஒபிசி அணியின் மாநிலச் செயலாளரும், சேலம் கோட்டமேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சி.தங்கராஜ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இது பாஜவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் , அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியுள்ளனர். அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைக்கத் தொடங்கியுள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அதிமுகவை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிற கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் குறிப்பாக பாஜக நிர்வாகிகள் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பின் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்.

அந்தவகையில், திமுகவின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும், கோட்டமேட்டுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான தங்கராஜ் அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அண்ணாமலை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்த விவகாரம் தமிழக பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in