வாக்குப்பதிவை குறைக்க அதிகாரிகள் சதி... கோவை பாஜக பரபரப்பு புகார்!

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்திருப்பதாக பாஜக புகார்
வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்திருப்பதாக பாஜக புகார்

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து குழப்பத்தை ஏற்படுத்துவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில விவசாயிகள் பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜ் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார்.

பாஜக விவசாயிகள் அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ் புகார்
பாஜக விவசாயிகள் அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ் புகார்

அப்போது அவர் கூறுகையில், ”கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி மாற்றி வைத்து வாக்காளர்களை அதிகாரிகள் குழப்பி வருகின்றனர். சில வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் வேண்டுமென்றே வாக்களிக்கும் நேரத்தை தாமதப்படுத்தி வருகின்றனர். ஒருவர் வாக்களிக்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆவதால், வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

பாஜக விவசாயிகள் அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ் புகார்
பாஜக விவசாயிகள் அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ் புகார்

அலுவலகத்தில் ஆட்சியர் இல்லாததால், போனில் தொடர்பு கொண்டு அவரிடம் இதுகுறித்து ஜி.கே.நாகராஜ் புகார் அளித்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அப்போது உறுதியளித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா அமைக்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்ததாக ஜி.கே.நாகராஜ் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in