மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற அய்யாக்கண்ணு கைது; ரயில் சங்கிலியை இழுத்து விவசாயிகள் போராட்டம்!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்

செங்கல்பட்டில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அய்யாக்கண்ணு தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் விவசாயி அய்யாக்கண்ணு, பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வாராணசி செல்ல இன்று காலை கன்னியாகுமரி - பனாரஸ் விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். அவருடன் 120க்கும் மேற்பட்ட விவசாயிகளும் முன்பதிவு செய்திருந்தனர். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இன்று காலை இவர்கள் அனைவரும் ரயிலில் ஏறி உள்ளனர். அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், திடீரென டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறி தஞ்சாவூரில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்

ரயில்வே துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ரயில் கிளம்பியது. இதனிடையே தங்களுக்கு இருக்கைகள் அமைத்து தரக் கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயி ஒருவர் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்த போது இருக்கைகளை ஏற்படுத்தி தரவில்லை என கூறப்படுகிறது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்

இதனால் அங்கு ரயிலை மறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம், ரயில்வே போலீஸார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வந்ததால் ரயிலில் பயணித்த சக பயணிகள் அதிருப்தி அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் அந்த ரயிலில் இருந்து இறங்கினர். இதனால் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதனிடையே இருக்கைகள் ஏற்பாடு செய்து தரவில்லை எனக்கூறி, அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் ரயில் நிலையத்தில் கடும் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in