வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரதமர் மோடி கங்கை படித்துறையில் சிறப்பு வழிபாடு!

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் காசி விஸ்வநாதர் ஆலயம், கங்கை படித்துறையில் வழிபாடு நடத்தினார்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று காலை 11.40 மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இதையொட்டி அவர் நேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபட்டார். இன்று கோயில் அருகில் உள்ள கங்கை நதியின் தஷ்வமேத் படித்துறையில் வழிபட்டார். இதற்கிடையே பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நேரம், ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

காசியில் பிரதமர் மோடி வழிபாடு
காசியில் பிரதமர் மோடி வழிபாடு

இன்று புஷ்ய நட்சத்திரம் மற்றும் கங்கா சப்தமி ஆகியவை நிகழ்கின்றன. ஜோதிட பண்டிட் ரிஷி திவேதி கருத்துப்படி, கிரகங்களின் நிலைப்பாட்டின் காரணமாக இந்த நிகழ்வு ஏற்படுவதாக வேதங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த நாளில் எந்த வேலையையும் செய்வது ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. புஷ்ய நட்சத்திரத்தில் ஏதேனும் வேலை செய்யப்பட்டால் அதன் நிறைவு உறுதி என்று கருதப்படுகிறது” என்றார்.

நமோ படித்துறைக்கு வழிபாட்டுக்குப் பின்னர், பிரதமர் மோடி, பாபா கால பைரவர் கோயிலுக்குச் சென்று வழிபட உள்ளார். அங்கு அவர் தனது வேட்பு மனுவைப் பெறுகிறார்.

வாரணசியில் வேட்பு மனு தாக்கல் நிகழ்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'காசியுடனான எனது உறவு அற்புதமானது, பிரிக்க முடியாதது மற்றும் ஒப்பிடமுடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்று மட்டுமே நான் சொல்ல முடியும்!’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in