கொட்டும் மழையில் ’மோடி சர்க்கார்...’ பாடலுக்கு ஆட்டம்போட்ட அசாம் முதல்வர்

பொதுக்கூட்ட மேடையில் ஆட்டம்போடும் ஹிமந்தா பிஸ்வ சர்மா
பொதுக்கூட்ட மேடையில் ஆட்டம்போடும் ஹிமந்தா பிஸ்வ சர்மா

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் சூடுபிடித்திப்பதன் மத்தியில், பிரச்சார களங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் சேர்ந்திருக்கிறது. இதற்கு அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னுதாரணமாகி இருக்கிறார்.

பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியில் ஏறுவதன் பொருட்டு, அதன் பத்தாண்டு ஆட்சியின் சிறப்புகள், சாதனைகளை நினைவுகூரும் ’மோடி சர்க்கார்’ பாடலை பாஜக தலைவர்கள் கடந்த ஜனவரியில் வெளியிட்டனர். தேர்தல் அட்டவணை வெளியானது முதல் அந்த பாடலை பாஜகவினர் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்தியாவின் பிரந்திய மொழிகள் உட்பட மொத்த 24 மொழிகளில் இந்த பாடல் உலா வருகிறது.

சிராங் பொதுக்கூட்டத்தில் நடனமாடும் முதல்வர் சர்மா
சிராங் பொதுக்கூட்டத்தில் நடனமாடும் முதல்வர் சர்மா

அசாம் மாநிலத்தின் முதல்வரும் தீவிர மோடி விசுவாசியுமான ஹிமந்த பிஸ்வா சர்மா, ’மோடி சர்க்கார்’ பாடல் வெளியானது முதலே அதனை கொண்டாடி வருகிறார். செல்லும் இடங்களின் பிரச்சார மேடைகளில் எல்லாம் மோடி சர்க்கார் பாடலை ஒலிக்கச்செய்து, நடனமாடவும் செய்கிறார். பொதுகூட்டத்தில் ஆஜரான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் அசாம் முதல்வர் மகிழ்ச்சியில் ஐக்கியமாகின்றனர்.

அசாமில் தற்போதைய மக்களவைத் தேர்தலின் மீதமுள்ள 4 தொகுதிகளான கவுகாத்தி, துப்டி, பார்பெட்டா மற்றும் கோக்ரஜார் ஆகிய தொகுதிகளுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. பாஜக வேட்பாளர்கள் மட்டுமன்றி அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கும் தானே முன்னின்று முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த வகையில் நேற்றைய தினம் கோக்ரஜார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிராங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சர்மா, 'மோடி சர்க்கார்' பாடலுக்கு மற்றுமொரு முறை நடனமாடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக பின்னர் அவர் பதிவிட்டஎக்ஸ் தள பதிவில், ”கனமழையையும் பொருட்படுத்தாமல், கோக்ரஜார் மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு திரண்ட மகத்தான ஆதரவைக் கண்டேன். எதிர்க்கட்சிகள் சீர்குலைந்த நிலையில், பாஜக மற்றும் என்டிஏ வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

அசாமில் இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தல் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. கோக்ரஜார், துப்ரி, பார்பேட்டா மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இவ்வாறு மூன்றாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in