கோவையில் பிரச்சாரத்தின் போது, குறும்பர் இன மக்கள் அன்பளிப்பாக வழங்கிய கம்பளியை பெற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கன்னடத்தில் பேசி நன்றி தெரிவித்து வாக்கு சேகரித்தார்.
கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், வடவள்ளி, சுண்டப்பாளையம், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
வீரகேரளம் ரவுண்டானா பகுதியில் உரையாற்றிய அண்ணாமலை, மோடியின் பிரதிநிதியான உங்கள் வீட்டு அன்பு தம்பியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார். இம்முறை கோவை மக்களவைத் தொகுதியில் தாமரை மலரும் என கூறினார். மேலும், வேறு எந்த கட்சி வண்டியும் இங்கிருந்து டெல்லி செல்லாது எனவும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தது தொடர்பாக உரிய நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த குறும்பர் இன மக்கள், கம்பளி ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அண்ணாமலை கன்னடத்தில் பேசி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அப்பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் என்பதால் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்தார். இதனால் பிரச்சாரத்தில் கூடியிருந்த பாஜகவினர் உற்சாகமடைந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!