29 பைசா பிரதமர் என்றால் கஞ்சா உதயநிதி என அழைக்க வேண்டியிருக்கும்... அண்ணாமலை அதிரடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

29 பைசா பிரதமர் என இனியும் அழைத்தால், கஞ்சா உதயநிதி என அழைக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி காட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின்
பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின்

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது பிரச்சாரங்களின் போது, தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதற்கு பதிலாக மத்திய அரசு 29 பைசா மட்டுமே திரும்ப தருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனால் பிரதமரை 29 பைசா பிரதமர் எனவும் அவர் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் திருப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து இன்று கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கவுந்தம்பாடியில் பிரச்சாரம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சீமான் - அண்ணாமலை
சீமான் - அண்ணாமலை

அப்போது பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி 29 பைசா பிரதமர் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அப்படி அவர் இனியும் விமர்சித்தால் அவரை கஞ்சா உதயநிதி என நாங்கள் அழைக்கலாமா? தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. இதைத் தடுக்க மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ”செல்லூர் ராஜு வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்தால் அன்று மழை வந்துவிடும். அவர் எப்போது நல்ல வார்த்தைகளை பேசி உள்ளார்? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடி விவாதத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார். முதலில், நாங்கள் ஏன் அவருடன் விவாதம் நடத்த வேண்டும்?

நாங்கள் எங்கள் மேடையில் இருந்து பிரச்சாரம் செய்கிறோம். அவர் அவரது மேடையில் இருந்து பிரச்சாரம் செய்யட்டும். பாஜகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே போட்டியே இல்லை. அவருடன் நாங்கள் ஏன் விவாதம் செய்ய வேண்டும்?” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in