வாங்க பேசலாம்... பாஜக கூட்டணிக்கு போட்டிபோட்டு தூதுவிடும் ஜெகன், நாயுடு கட்சிகள்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஆந்திர மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முட்டி மோதும் நிலையில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமரைச் சந்திக்க இன்று நாடாளுமன்றம் வந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறி வரும் நிலையில், பாஜக கூட்டணிக்குள் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க போட்டிபோட்டு வருகின்றன. இரு கட்சிகளுமே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களமிறங்க முடிவு செய்துவிட்ட நிலையில், யார் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்பதில் போட்டா போட்டி நிலவி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிறையில் இருந்த போதே ஜன சேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக பவன் கல்யாண் அறிவித்தார். இதற்கு நடுவே பாஜக கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடுவும் ஆர்வம் காட்டி வருகிறார். இது விஷமாக பேசுவதற்காக நேற்று முன் தினம் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காக இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரைச் சந்திக்கும் ஜெகன்மோகன், மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி இருப்பதால் தெலுங்கு தேசம் கட்சியினர் சற்றே கலக்கத்தில் இருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in