அதிமுகவுக்கு பலமுறை உயிர் கொடுத்தது பாமகதான்... ஆதாரங்களோடு பேசிய அன்புமணி ராமதாஸ்!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்தான். உங்களோடு கூட்டணி வைத்தால் தியாகிகள்; விலகினால் துரோகிகளா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திருக்கழுக்குன்றம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு பலமுறை உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்.

பாமக எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாறி மாறி உயிர் கொடுத்து வருகிறோம். இபிஎஸ்சுக்கு நினைவு இருந்தால் 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்கு சென்றார்கள். அவர் வெளியே வந்த பிறகு அவர் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலை இருந்தது. அப்போது 1998ல் அவருக்கு உயிர்கொடுத்தோம், அவரது கட்சிக்கும் உயிர்கொடுத்தோம்.

வேட்பாளருடன் அன்புமணி ராமதாஸ்
வேட்பாளருடன் அன்புமணி ராமதாஸ்

பிறகு 2001 நாங்கள் முதலில் சென்றதால்தான் மற்ற கூட்டணி கட்சிகள் அதன் பிறகு வந்தார்கள். 2001 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஜெயலலிதாவை அமரவைத்தோம். 2019ல் இதே நிலைதான். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் இபிஎஸ் முதல்வர் பதவியை இழந்திருப்பார். ஆனால் எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்று சொல்லி சரியாக கொடுக்கவில்லை. தேர்தல் 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அதற்கு முன்பாக 1 மணிக்குத்தான் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது.

மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் இபிஎஸ் எங்கே சொன்னார்?. அவரது கட்சியின் தலைவர்களும் இதை பற்றி பேசவில்லை. உங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் தியாகிகள், வரவில்லை என்றால் நாங்கள் துரோகிகள்” என்று கேள்வி எழுப்பினார்

தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசு 10.5% இடஒதுக்கீடு இதுவரையில் வழங்காமல் அலகழிக்கிறது. இடஒதுக்கீடு வழங்காமல் ஸ்டாலின் சமூகநீதி பற்றி பேசுகிறார். சமூகநீதிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம். எங்கே பார்த்தாலும் திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது. கல்வி கடன், விவசாயி கடன் தள்ளுபடி செய்வதாக தெரிவித்த திமுக ஆட்சி, இதுவரையில் அதனை நிறைவேற்றாமல் துரோகம் செய்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபடுவதாக தெரிவித்த திமுக அரசை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் எதுவும் மாற்றப்படவில்லை. நீட் தேர்வு விலக்கு எனும் கண்கட்டி வித்தை காண்பித்து வருகிறது திமுக.

மக்கள்
மக்கள்

அதிமுகவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்காதீர்கள். அவர்கள் ஆளும் கட்சியாக இல்லை, அவர்களுக்கு பிரதமர் வேட்பாளரும் இல்லை. அப்படியிருக்கையில் அவர்களுக்கு வாக்களித்தால் யாரிடம் போய் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள். திமுக கூட்டணிக்கும் வாக்களிக்காதீர்கள். நம் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இப்போது நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கும் அடித்தளம்தான் 2026 சட்டமன்றத்தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சியை தமிழகத்தில் அமைக்க உதவும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in