அமித் ஷா
அமித் ஷா

காரைக்குடியில் ரோடு ஷோ... கடைசி நேரத்தில் கேன்சல் செய்த அமித் ஷா!

காரைக்குடியில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து நடைபெற இருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோடி ரோடு ஷோ
மோடி ரோடு ஷோ

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு நாட்கள் நெருங்குவதால், பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கடந்த 9-ம் தேதி நடந்த ரோடு ஷோவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாளை தமிழகம் வர உள்ளார். சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி தொகுதிகளில் அவர் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

இதில், சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து அமித் ஷா நாளை காரைக்குடியில் ரோடு ஷோவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் பெரியார் சிலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து அண்ணாசிலை வரை அமித் ஷா ரோடு ஷோவை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக காவல்துறை தரப்பில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அமித் ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று கட்சி தலைமை அறிவித்துள்ளது. மோடியின் ரோடு ஷோவுக்கு எதிர்பார்த்த ஆதரவில்லை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் தேவநாதன் யாதவ்
பிரதமர் மோடியுடன் தேவநாதன் யாதவ்

அமித் ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி ரூபாய் நிதி மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியினர், காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் மூலம் அவர் அரசியல் களத்தில் தொடர்வாரா, இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ரோடு ஷோவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரலில் காரைக்குடி ரோடு ஷோ மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நிகழ்ச்சிகளில் எந்த மாற்றம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!

தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!

சத்துணவு திட்டத்தின் வித்தகர் பி.எஸ்.ராகவன் காலமானார்!

கேரள தேவாலயங்களில் 'மணிப்பூர் ஸ்டோரி' ஆவணப்படம் திரையிடல்... கடும் கொந்தளிப்பு!

அரசு செலவில் கட்சிக்கு ஆதரவான விளம்பரமா?... அச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in