எல்லையில் ஊருருவலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டது... தெரிந்து தான் பேசினாரா அமித் ஷா?

அமித் ஷா
அமித் ஷா

மேற்குவங்க மாநில எல்லையில் ஊடுருவலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அமித் ஷா - மம்தா பானர்ஜி
அமித் ஷா - மம்தா பானர்ஜி

அப்போது பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை மேற்குவங்க மக்கள் பயன்படுத்த முடியாமல் மம்தா பானர்ஜி தடுத்து வருகிறார். மோடியின் திட்டங்கள் மக்களுக்கு கிடைத்தால் அவர்கள் மோடியை ஆதரிப்பார்கள் என மம்தா அஞ்சுகிறார். சந்தேஷ்காலியில் நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நடந்த அவமானம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தவும், வன்முறையை தடுக்கவும் ஒரே ஒரு வழி மட்டும் தான் உள்ளது. அது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவது தான்” என்றார்.

வங்கதேச எல்லையில் பி.எஸ்.எஃப் வீரர்கள் ரோந்துப்பணி
வங்கதேச எல்லையில் பி.எஸ்.எஃப் வீரர்கள் ரோந்துப்பணி

தொடர்ந்து பேசிய அவர், ”மேற்கு வங்கத்தில் வங்கதேச ஊடுருவலை தடுக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தவறிவிட்டார். ஒரு பக்கம், ஊடுருவலை ஆதரிக்கிறார். மறுபக்கம், அகதிகளுக்கு குடியுரிமை கிடைப்பதை அவர் தடுக்கிறார். இந்துக்கள் மற்றும் பௌத்த மத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்றார்.

மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான எல்லைப் பகுதியை பாதுகாத்து வருவது எல்லைப் பாதுகாப்புப் படை என்று அழைக்கப்படும் பிஎஸ்எஃப் ராணுவத்தினர் ஆவர். பிஎஸ்எஃப் அமைப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஊடுருவலைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக அமித் ஷா பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in