தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும்... அமித் ஷா பரபரப்பு பேட்டி!

அமித் ஷா
அமித் ஷா

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். முன்னதாக அவர், காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. இங்குள்ள 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த அமித் ஷா
வேட்புமனு தாக்கல் செய்த அமித் ஷா

அப்போது அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அமித் ஷா 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் அவர், காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சோனல் படேல் போட்டியிடுகிறார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்," காந்திநகர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தொகுதி எல்.கே.அத்வானி, வாஜ்பாய் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி வாக்காளராக உள்ள தொகுதி என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது.

இந்த தொகுதியில் எம்.பியாக கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும்" என்று கூறினார்.

அமித் ஷா
அமித் ஷா

காந்திநகர் மக்களவைத் தொகுதியில் காந்திநகர் வடக்கு, கலோல், சனந்த், கட்லோடியா, வெஜல்பூர், நாரன்புரா மற்றும் சபர்மதி ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகள் அனைத்தும் பாஜக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in