அடுத்தடுத்த வழக்குகளில் கைது! அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10 வரை காவல் நீட்டிப்பு!

அமர் பிரசாத் ரெட்டி
அமர் பிரசாத் ரெட்டி

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்றக்  காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக்கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கானத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.  அந்தப் புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீஸாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்கள் புழல் சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள்  தொடர்பாக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 10 ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in