திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட்... தனிச்சின்னத்தில் தான் போட்டி: வைகோ அறிவிப்பு!

மு.க.ஸ்டாலின், வைகோ
மு.க.ஸ்டாலின், வைகோ

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெல்லும் நோக்கத்தில் திமுக காய்நகர்த்தி வருகிறது. தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், திமுக, மதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மூன்று கட்டமாக நடந்து வந்தது. காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 இடங்களை விருப்ப தொகுதியாக மதிமுக கோரியது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதையடுத்து இந்த பேச்சுவார்த்தையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. எந்த தொகுதி என்பது குறித்து மற்ற கட்சிகளுடன் பேசிய பின் தெரியப்படுத்தப்படும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வைகோ
தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வைகோ

தொகுதி பங்கீடு முடிந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். மற்ற கூட்டணிக்கு கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் எந்த தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது என்பது தெரிய வரும். மாநிலங்களவைத் தேர்தலுக்கு 15 மாதங்கள் இருப்பதால், அதுகுறித்து பின்னர் ஆலோசிக்கப்படும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

எரிவாயு சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு... தேசிய மகளிர் தினத்தில் பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு

பகீர்... துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சென்னையில் ரவுடிகள் 2 பேர் கைது!

சிக்கலில் திமுக... உதயநிதியை வளைக்கும் வியூகத்தில் மத்திய சக்திகள்?

ஷாக்... இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள், தாய் உள்பட 6 பேர் குத்திக்கொலை: கனடாவில் பயங்கரம்!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை துவங்கும் திமுக, அதிமுக... முதல் பட்டியலை வெளியிடப்போவது யார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in