கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு பிரச்சினை... பாஜகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

கச்சத்தீவை மீட்க போராடிய ஒரே கட்சி அதிமுக தான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ஜெயப்பிரகாஷை ஆதரித்து இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, "இன்றைய தினம் பல அரசியல் கட்சிகள் கட்சத்தீவு பிரச்சினையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. 1974ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. மாநிலத்தில் திமுக ஆட்சி. இந்த இரு கட்சிகளும்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தன. அதை தடுத்து நிறுத்த ஜெயலலிதா எவ்வளவோ முயற்சி செய்தார். கச்சத்தீவை மீட்டெடுக்க 2008ம் ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவே வழக்குத் தொடுத்தார். அப்போதும் மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சி. அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா கட்சத்தீவை மீட்டெடுக்க முயற்சி எடுத்தார்.

கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

பின்னர் மீண்டும் 2011ம் ஆண்டு ஜெயலிலதா முதல்வரான பிறகு வருவாய்த்துறை மூலமாக தொடுத்த வழக்கில் அது ஏற்கெனவே உள்ள வழக்கோடு இணைக்கப்பட்டது. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சித் தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பின்னர், பிரதமரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

ஆனால் இப்பொழுது மத்தியிலேயே ஆட்சி செய்பவர்களும், இங்கே இருக்கக் கூடிய பாஜக தலைவர்களும் கட்சத்தீவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகாலமாக மத்திய பாஜக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. இன்றைக்கு அரசியல் சூழ்நிலை, வரும் தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள். கச்சத்தீவை வழங்கியதை மறுபரிசீலனை செய்வோம் என மத்திய பாஜக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். உண்மையிலேயே கச்சத்தீவை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருந்த ஒரே கட்சி அதிமுக தான்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

x
காமதேனு
kamadenu.hindutamil.in