இரண்டு முறை எம்பி-யாக இருந்த எனக்கே இந்த நிலையா... வாக்களிக்காமல் வெளியேறிய அதிமுக மாவட்டச் செயலாளர்!

அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் குமார்
அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் குமார்

தான் வாக்களிப்பதை படம்பிடிக்க புகைப்படக்காரர்களை அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமார் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வாக்களிக்காமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பி-யுமான ப.குமார் இன்று காலையில் வாக்களிக்கச் சென்றார்.

வாக்குச்சாவடி மையத்துக்குள் வரிசையில் நின்று அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்து வெளியேறுமாறு கூறினர்.

வாக்குச்சாவடியை விட்டு வெளியேறிய குமார்
வாக்குச்சாவடியை விட்டு வெளியேறிய குமார்

இதனால் குமாருடன் வந்த அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார், "நான் இந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்பி-யாக இருந்திருக்கிறேன். விஐபி-க்கள்    வாக்களிக்கும்போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ள வழக்கம் தான்.

வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் முறையாக நடைமுறைகளை தெரிந்து கொண்டு வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற வேண்டும். நான் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமாரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்க வருகிறேன்"  என கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

அதேசமயம் அவருடன் வந்த அதிமுக பிரமுகர்கள், ”இன்று காலை மக்கள் மன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களிப்பதை  படம் எடுக்க அனுமதித்த தேர்தல் அலுவலர்கள் அதிமுக விஐபி-க்களை  படம் எடுக்க அனுமதிக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியதுடன்  அவர்களும் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in