சு.வெங்கடேசன் பிளஸ் 2 படித்தாரா, பி.காம் படித்தாரா?: புது பிரச்சினையைக் கிளப்பும் அதிமுக வேட்பாளர்!

மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக ராஜன் செல்லப்பா வாக்கு சேகரித்தார்.
மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக ராஜன் செல்லப்பா வாக்கு சேகரித்தார்.

மதுரை மக்களவை உறுப்பினர் நிதி மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4.34 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டுள்ளது.  2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 16 திட்டங்கள் இன்னும் முடியவில்லை. எனவே, மதுரையில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். 'எம்.பி நிதிக்கான ரூ.17 கோடி ஒதுக்கீட்டில் ரூ.5 கோடி மட்டுமே சு.வெங்கடேசன் செலவிட்டுள்ளார். மீதம் ரூ.12 கோடியை பயன்படுத்தவில்லை' என டாக்டர் சரவணன் புகார் கூறி வருகிறார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

இதற்கு, " மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 கோடியில், 16 கோடியே 96 லட்சம் ரூபாய் அநேகமாக 100 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 245 பணிகளைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்துள்ளோம். எண்ணிக்கையின் அடிப்படையில் இவ்வளவு அதிகமான பணிகளை செய்திருப்பதே ஒரு சாதனை தான்.

இப்படி இருக்க, 5 கோடி மட்டுமே செலவழித்துள்ளோம், மீதத்தை செலவழிக்கவில்லை என டாக்டர் சரவணன் கூறுவது அவதூறுகளைத் தாண்டி வேறு எதுவுமில்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, ஆனால், தாங்கள் உதிர்க்கும் சொற்களுக்கு நீங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி இருக்குமென்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்திருந்தார். தற்போது அதற்கும் டாக்டர் சரவணன் விளக்கமளித்துள்ளார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா யானைமலை, கொடிக்குளம், மலை சாமிபுரம், புதூர்,புதுப்பட்டி, நரசிங்கம் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். முன்னதாக ஒத்தக்கடை நரசிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பிரசாரம் தொடங்கப்பட்டது. பிரசாரத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டிஐ தகவலைத்தான் ஊடகங்களில் தெரிவித்திருந்தேன். மக்களவை உறுப்பினர் நிதியை சு.வெங்கடேசன் முறையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு சு.வெங்கடேசன் பெயரெடுத்துக் கொள்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

கடந்த  5 வருடங்களில் 25 கோடி ரூபாய் மக்களவை உறுப்பினருக்கு நிதியாக வழங்கப்படும். ஆனால், கொரோனா காலக்கட்டம் என்பதால் மக்களவை உறுப்பினர்களுக்கு 17 கோடி அளவிற்கு நிதி வழங்கப்பட்டது. ஏற்கெனவே நான் 5 கோடி தான் சு.வெங்கடேசன் செலவழித்து இருந்தார் என்று கூறினேன். ஆனால், 5 ஆண்டுகளில் எம்.பியாக பதவி வகித்த வெங்கடேசன் 4 கோடியே 34 லட்ச ரூபாய் நிதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். மீதமுள்ள 12 கோடிக்கு என்ன பணிகளை செய்துள்ளார் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

மக்களவை உறுப்பினர் நிதியின் மூலம் 260 திட்டங்களில் 228 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது, அதில் 78 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 155 பணிகள் இன்னும் முடியவில்லை. கடைசி வருடம் 72 பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2019-ம் ஆண்டில் 16 திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது  இன்னமும் பணிகள் முடியவில்லை.

சு.வெங்கடேசன் என்மீது வழக்குத் தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதே போல் தான் பி.காம் படித்துள்ளதாக சு.வெங்கடேசன் கூறுகிறார் ஆனால், தேர்தல் அபிடவிட்வில்(உறுதிச் சான்று) பன்னிரெண்டாம் வகுப்பு என்று கூறப்பட்டுள்ளது" என்று டாக்டர் சரவணன் கூறினார்.அவரின் இந்த புது புகாரால் மதுரை அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in