அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிமுகவில் இணைந்த மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகி!

மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகி கிருபாகரன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தார்.
மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகி கிருபாகரன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் சேர்ந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்
தேர்தல்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்கள் மாற்று முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி
அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் டெல்லியில் பாஜகவில் இணைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த நடிகை கவுதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலியும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகி கிருபாகரன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தார்.
மக்கள் நீதி மய்ய மாநில நிர்வாகி கிருபாகரன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இது மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in