பிம்பிளிக்கி பிளாப்பி காமெடி தான் ஞாபகத்துக்கு வருது... பிரச்சாரத்தில் பின்னிப் பெடலெடுத்த விந்தியா!

பாஜக கூட்டணி
பாஜக கூட்டணி

பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேர்ந்ததை திரைப்பட காமெடியோடு ஒப்பிட்டு அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும், எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களையும், கட்சிகளையும் வசைபாடி பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அத்துடன் முக்கிய கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் கலகலப்பாக பேசி வாக்குவேட்டை ஆடிவருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா தனது பிரச்சாரத்தில் பாஜக உடன் சமத்துவ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சேர்ந்ததை, சினிமா காமெடியுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்
அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்

நடிகை விந்தியா தனது பிரச்சாரத்தில், "ஏன் இருக்கிறாம்... எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டணி இருக்கிறது என்றால் அது பாஜக கூட்டணிதான். அந்தக் கூட்டணியில் இருப்பவர்களுக்கும், கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜி.கே.வாசன், பச்சைமுத்து, அன்புமணி, சரத்குமார் இவர்கள் எல்லாம் சேர்ந்து என்னவாகப் போகிறது.

மோடி பிரச்சார மேடையில் இவர்கள் எல்லாம் வரிசையாக நிற்கும்போது எனக்கு பாண்டியராஜன் படத்தின் பிம்பிளிக்கு பிளாப்பி எனும் காமெடிதான் நினைக்கு வந்தது. இவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு என்ன ஆகப் போறாங்கன்னு தெரியல. இதில் ஸ்பெஷல் ஐயிட்டம் சரத்குமார்தான்.

பாஜகவுடன் சரக்குமார் கூட்டணி அமைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டணிக்கு அமைப்பார் என்று பார்த்தா கட்சியை பாஜகவோடு இணைத்து விட்டார். இது எப்படி இருக்குன்னா, கட்சியை நான் வெச்சிக்கிறேன்... விருதுநகர் தொகுதியை நீங்க வெச்சிக்கோங்க. என்று வடிவேலு காமெடி போல் அண்ணாமலை, சரத்குமாரிடம் சொன்ன மாதிரி இருக்கு. கட்சியை இணைத்த பிறகு மறுநாள் சரக்குமாரும், ராதிகாவும் பாஜக அலுவலகத்திற்கு சென்றார்களாம். அப்போது, கட்சியை பாஜகவோடு இணைச்சிருக்கீங்க... நீங்க இரண்டு பேர் மட்டுதான் வந்து இருக்கீங்க என்று கேட்டதற்கு, கட்சியில நானும் ராதிகாவும்தான் இருக்கிறோம் என்று சரத்குமார் சொன்னாராம்.

பாஜக பாமக கூட்டணி
பாஜக பாமக கூட்டணி

இது ஒரு புறம்ன்னா... பாஜகவோடு பாமக கூட்டணி சேர்ந்தது இன்னும் சுவாரஸ்யம். பாமக கூட்டணிக்காக பாஜகவிடம் போனபோது, நகைக்கடை விளம்பரம் மாதிரி, நாங்க சீட்டும், ரேட்டும் சொல்றோம். கூட்டணி எஸ்டிமேட்டை வாங்கி வெச்சிக்கோங்க... மற்ற இடத்துக்கு போய் கம்பேர் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு சரிப்பட்டு வரலன்னா, நம்மகிட்ட வாங்க.. நம்மளே கூட்டணி வைச்சிக்கலாம் என்று பாஜகவில் சொன்னாங்களாம்.

பாஜக சோக்கு வேண்டாம்னு ராமதாஸ் எவ்வளவு சொல்லியும் அன்புமணி கேட்காமல் கூட்டணி வைச்சிருக்காரு. இவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in