திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நடிகை ரோகிணி தீவிர பிரச்சாரம்... தெலுங்கு, தமிழில் மாறி மாறி பேசி வாக்குசேகரிப்பு!

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு நடிகை ரோகிணி தீவிர பிரச்சாரம்... தெலுங்கு, தமிழில் மாறி மாறி பேசி வாக்குசேகரிப்பு!

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் திண்டுக்கல், மதுரை தொகுதிகளில் திரைப்பட நடிகை ரோகிணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக திரைப்பட நடிகை ரோகிணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முக்கியமாக, மத்திய அரசின் விமர்சித்து பல இடங்களில் தெலுங்கில், தமிழிலும் மாறி மாறி பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.

தேர்தல் களத்தில் ரோகிணி
தேர்தல் களத்தில் ரோகிணி

கடந்த சில நாட்களாக மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகை ரோகிணி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது, பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மணிப்பூர் விவகாரத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தும் மத்திய அரசு மவுனம் காப்பது குறித்தும் மக்களிடையே எடுத்துரைத்துார்.

திண்டுக்கல் தொகுதியில் ரோகிணி பிரச்சாரம்
திண்டுக்கல் தொகுதியில் ரோகிணி பிரச்சாரம்

பாஜக தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடைப்பெறுவதாக கூறி பட்டியலிடத் துவங்கினார். குடியரசு தலைவர் உட்பட பெண்களுக்கு இந்த ஆட்சியில் மரியாதை இல்லை என்றும், மக்கள் விரோத பாஜகவுக்கு வாக்கு அளிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீரவாதிகள் போல நடத்தியது பாஜக அரசு. அதனால், இந்த அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

தேர்தல் களத்தில் மற்ற திரைப்பட நட்சத்திரங்கள் போல அல்லாமல், தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து புரிதலுடன் மக்களிடையே பேசி கவனம் ஈர்த்து வருகிறார் ரோகிணி.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in