ஆக்டரோ, டாக்டரோ பாமக போல முடியுமா?: நடிகர் விஜய்யை விமர்சித்த அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவிற்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். இதன் பின் கட்சியினருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மக்களவை தேர்தலுக்கு பாமக தயாராக உள்ளது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழகத்தில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவிற்கு சமூகநீதி குறித்து பேச தகுதியில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் முதல்வருக்குதான் மனசு இல்லை.” என்றார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அன்புமணி, ”டாக்டராக இருந்தாலும் சரி, ஆக்டராக இருந்தாலும் சரி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் பாமக போல சாதனைகளைச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இருக்கும் ஈகோ பிரச்சினையால் பொதுமக்களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் தான் பாதிப்பு. பெரியார் பல்கலைக்கழக முறைகேடு குறித்து அரசு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அன்புமணி ராமதாஸ், விஜய்
அன்புமணி ராமதாஸ், விஜய்

மேலும், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிட்டு திறந்திருக்க வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக அப்புறப்படுத்த பார்க்கிறார்கள். இங்கு பசுமைப் பூங்காவை தவிர வேறு என்ன கொண்டு வந்தாலும் நானே முதல் ஆளாக இறங்கி கடுமையாக போராடுவேன்” என்று எச்சரித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

பகீர்... காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு: சிவசேனா தலைவர் கவலைக்கிடம்!

குரூப் 2-வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு... நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

1,000 ரூபாய் அனுப்பினால் ஆபாச போட்டோ அனுப்புகிறேன்: பெண்ணை நம்பி பணத்தை இழந்த நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in