நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

நடிகர் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் திமுகவிற்கு பாதிப்பா என்பது குறித்து அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினைத் தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் தொடங்கும் என்றும் அவர் நேற்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழியிடம் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதால், திமுகவுக்கு நிச்சயமாக எந்த பாதிப்பும் ஏற்படாது. முதலமைச்சரின் நல்லாட்சியை பொறுத்துதான் அதற்கான ஒரு பரிசாகதான் மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்.

சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி பிரிக்கக்கூடாது என்பதைத்தான் எல்லோருமே கூறிக்கொண்டிருக்கிறோம்; இதை இப்போது அல்ல, அப்போதிலிருந்தே தொடர்ந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in