வாக்குப்பதிவு இயந்திரத்தை தீயிட்டு கொளுத்திய இளைஞர்... மகாராஷ்டிரா தேர்தலில் பரபரப்பு!

வாக்குப்பதிவு இயந்திரத்தை இளைஞர் கொளுத்தியதால் பரபரப்பு
வாக்குப்பதிவு இயந்திரத்தை இளைஞர் கொளுத்தியதால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்த இளைஞர், வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவை, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கான, மூன்றாவது கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடந்தது.

தீயை அணைக்க முயற்சிக்கும் தேர்தல் அதிகாரி
தீயை அணைக்க முயற்சிக்கும் தேர்தல் அதிகாரி HR Ferncrystal

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராமதி, ராய்காட், உஸ்மானாபாத், லத்தூர் (தனி), சோலாப்பூர் (தனி), மாதா, சாங்லி, சதாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கானங்கள் ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மகாராஷ்டிராவில் சங்கிலி எனும் நகரத்தில் உள்ள பகல்வாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் திடீரென புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த இவிஎம் இயந்திரத்தை தீ வைத்து கொளுத்தினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரிகள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தை பார்த்து வாக்களிக்க வந்த பொதுமக்கள், பதறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீஸார், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தை தீயிட்டு கொளுத்தினார் என்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சில மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடி மையத்திற்குள் இளைஞர் புகுந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தை தீ வைத்து கொளுத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in