இந்தியாவிலேயே மோசமான எம்.பி என்றால் ஆ.ராசாதான்... அண்ணாமலை காட்டம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இந்தியாவிலேயே மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேலூரில் இருந்து தனி விமான மூலம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரச்சார மேடைக்கு வருகை தந்தார்.

மேட்டுப்பாளையம் பிரச்சாரக் கூட்ட மேடையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள்
மேட்டுப்பாளையம் பிரச்சாரக் கூட்ட மேடையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள்

அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை, மத்திய இணை அமைச்சரும் நீலகிரி வேட்பாளருமான எல்.முருகன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் பேசும்போது, கோவை மேட்டுப்பாளையம் இருப்பு பாதையை இரட்டை வழி பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இதைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”நாட்டிலேயே மிகவும் மோசமான நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது ஆ.ராசாதான். திமுக எங்களுக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் திமுகவினர் எங்கு வந்து வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கஞ்சா பணம் என்பதை மறந்து விடாதீர்கள். அடுத்த 7 நாட்களுக்கு பாஜகவினர் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பிரதமர் நரேந்திர மோடி அதே அர்ப்பணிப்போடு நமக்கு 5 ஆண்டுகள் பணியாற்ற முடியும்” என்று தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...   


லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in