தேர்தலை சீர்குலைக்க திட்டம்; சத்தீஸ்கரில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி!

மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை
மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் மக்களவைத் தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சில நாள்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் மாவோயிஸ்டுகளின் முகாமை கட்சிரோலி போலீசார் முறியடித்து, அங்கிருந்து வெடிபொருள்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கேந்திரா - கோர்ச்சோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் காலை 6 மணியளவில், பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் தெரிவித்தார். அப்போது அதில் 9 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை
பாதுகாப்பு படை

துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் இருந்து நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.

பீஜப்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கே தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்

மாவோயிஸ்டுகள் (கோப்பு படம்)
மாவோயிஸ்டுகள் (கோப்பு படம்)

குறிப்பிடத்தக்க வகையில், மாவோயிஸ்டுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறார்கள். இந்த காலகட்டத்தில் பஸ்தார் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது ஏராளமான தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த மார்ச் 27 அன்று, பிஜப்பூரில் உள்ள பசகுடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய சம்பவத்துடன் சேர்த்து, பீஜப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் மண்டலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 41 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in