தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 181 மிக பதற்றமானவை... தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

தமிழ்நாட்டில் மொத்தம் 8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு, வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகள், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு, வாக்குஎண்ணிக்கை உள்ளிட்டவற்றுக்கான பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 68,144 வாக்குச் சாவடிகளில் 8050 பதற்றமானவை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் 181 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

அதிகபட்சமாக மதுரையில் 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரில் 120 வாக்கு சாவடிகள், வடசென்னையில் 254 வாக்கு சாவடிகள் ,தென் சென்னையில் 456 வாக்கு சாவடிகள், மத்திய சென்னையில் 192 வாக்கு சாவடிகள், ஸ்ரீபெரும்புதூரில் 337 வாக்கு சாவடிகள், காஞ்சிபுரத்தில் 371 வாக்கு சாவடிகள், அரக்கோணத்தில் 258 வாக்கு சாவடிகள், வேலூரில் 246 வாக்கு சாவடிகள், கிருஷ்ணகிரியில் 208 வாக்குச்சாவடிகள், தர்மபுரியில் 311 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in